
சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடியில் அப்படி என்ன தொழில்நுட்பம் என்றால் தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் ஆண்ட்ராய்டுதான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணாடியை நம் முகத்தை பார்த்து ஒப்பனை செய்வதைத்தான் பாா்த்திருப்பாேம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் உள்ள தனிச்சிறப்பு, நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் சிறிய கணினியாக செயல்படுகிறது. இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடி தாெழில்நுட்பம் ரபேல் டைமெக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
நம் கணினியில் இருப்பது போலவே ஐகான்கள் கண்ணாடியின் வல மற்றும் இடப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.ஒ.எஸ், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொடுத்திரையின் மூலம் இதனை பயன்படுத்த முடிகிறது. இதன்மூலம் ஐகான்களை க்ளிக் செய்து மெசேஜ் படிப்பது, படம் பார்ப்பது, நியூஸ் பார்ப்பது, வீடியோ காலிங் போன்ற அனைத்து பயன்பாடுகளையும் உபயோகப்படுத்த முடிகிறது. ஆப்பிள் ஐ.ஒ.எஸ் 10 ல் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரபேல் கூறுகிறார்.
நம் செல்போன் லாக் ஆவதை போன்று இந்த ஸ்மார்ட் கண்ணாடியும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு லாக் ஆகி விடும். லாக் ஆகி விட்டால் ஸ்மார்ட் கண்ணாடி நார்மல் கண்ணாடி போல மாறிவிடும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.