ஆண்ட்ராய்டு போன் பயனாட்டாளா்களுக்கு ஓா் எச்சரிக்கை! : தகவல்களைத் திருடும் ‘கூலிகன்’ வைரஸ்

 |  First Published Dec 4, 2016, 3:44 PM IST



ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் மால்வேரினை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். 

கூலிகன் மால்வேரால் இதுவரை உலகம் முழுவதுமுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மால்வேரால் சராசரியாக தினசரி 13,000 ஆண்ட்ராய்டு கருவிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மூலம் இயங்கும் கருவிகளை மட்டுமே இந்த கூலிகன் மால்வேர் தாக்குகிறது. அதனாலேயே கூலிகன் என பெயர் பெற்றது. குறிப்பாக ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் கணக்குகளின் தகவல்களையே குறிவைத்து தாக்குகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட கூகுள் கணக்குகள் முடங்கும் அபாயமும் உண்டு. கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களான ஜெல்லி பீன், கிட் கேட் மற்றும் லாலி பாப் ஆகிய இயங்குதளம் மூலமாக இயங்கும் கருவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. கூலிகனால் பாதிக்கப்பட்ட மொத்த கருவிகளில் 57 சதவீத கருவிகள் ஆசியாவில் உள்ளன, அதேநேரம் 9 சதவீத கருவிகள் ஐரோப்பாவில் உள்ளன.

பாதிப்பு குறித்து அறிய செய்ய வேண்டியது

https://gooligan.checkpoint.com/ என்ற இணையதளத்துக்குச் சென்று உங்களது ஆண்ட்ராய்டு கருவியுடன் தொடர்புடைய கூகுள் இ-மெயில் முகவரியை அளித்து உங்களது கருவி பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?:

உங்களது ஆண்ட்ராய்டு கருவி கூலிகன் தாக்குதலுக்கு உள்ளானதை அறிந்தால்,

* பிளாசிங் (Flashing) எனப்படும் இயங்குதளத்தை சுத்தம் செய்யும் நடைமுறையை உடனடியாக செய்யுங்கள்.

* அதன்பின்னர் உங்கள் கூகுள் கணக்குகளின் கடவுச் சொல்லை உடனடியாக மாற்றுங்கள்.

* கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமே கூலிகன் உங்கள் மொபைலைத் தாக்கும் என்று அமெரிக்க நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பில்லாத மொபைல் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கலாம்.

* நம்பகத்தன்மையான ஆண்டிவைரஸ் சாப்ட்வேர்கள் மூலமாக உங்களது ஆண்ட்ராய்டு கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

click me!