ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடி...!!! கிளம்பிடுச்சி சர்ச்சை ....!!!
மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜியோ , தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு சலுகையை நீட்டித்து, அறிவிப்பை வெளியிட்டார் முகேஷ் அம்பானி. அப்போது பேசிய முகேஷ் அம்பானி , மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பேராதரவு கொடுப்பதாக தெரிவித்து, பாரத பிரதமரின் செல்லாது நோட்டுகள் தொடர்பான அதிரடி திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கையில் வந்துள்ள ஜியோ விளம்பரத்தில் பிரதமர் போட்டோவை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தற்போது, வைரலாக பரவி வருகிறது.இதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி நீரஜ் சேகர், மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் ராஜூவர்தன் சிங் ரதோர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் படம் பயன்படுத்தியது குறித்து தெரியும் என்றும்,. ஆனால் இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்
இந்த செயல்பாடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சேகர் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பேசிய ரதோர், முறைகேடாக பெயர்கள் மற்றும் குறியீடுகள் பயன்படுத்துவது தொடர்பான சட்டப்பிரிவு எண் 1950ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எது எப்படியோ மக்கள் மத்தியில் ஜியோவிற்கும் வரவேற்பு உண்டு....!! பிரதமரின் திட்டத்திற்கும் வரவேற்பு உண்டு.....!!!