அமோக வரவேற்பில் நோக்கியா...! 120 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது நோக்கியா ஸ்மார்ட்போன்...!
நோக்கியா மொபைல் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி சிறப்பு வாய்ந்தது.சமீபத்தில் நடந்த ஸ்மார்ட்போன்களுக்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கிய பல ஸ்மார்ட் போன்ககளை அறிமுகம் செய்தது.
நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்த, எச்எம்டி குளோபல் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, ஒரே சமயத்தில் நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி, உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என எச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது.
நோக்கியா ஸ்மார்ட் போன்களின் விலை
நோக்கியா 3( EUR 139) - ரூ.9,800,
நோக்கியா 5 (EUR 189) - ரூ.13,500
நோக்கியா 6 (EUR 229) - ரூ.16,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நோக்கியா பீச்சர் போனான 3310,( EUR 49) - ரூ.3,500 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, நோக்கியாவின் ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளதால், மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது