இதுவரை, ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களில் மட்டுமே கூடுதல் கட்டணம் இல்லாமல் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கி வந்தது.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவுடன் கூடிய பிளாட்களை வழங்கிவரும் நிலையில், அதற்குப் போட்டியாக ஏர்டெல் (Airtel) நிறுவனமும் நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல் முதல் முறையாக நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை, ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களில் மட்டுமே கூடுதல் கட்டணம் இல்லாமல் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கி வந்தது.
ஏர்டெல்லின் நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் கூடிய புதிய திட்டத்தின் விலை 1,499 ரூபாய். இந்தத் திட்டம் இப்போது ஏர்டெல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் கிடைக்கிறது. ஏர்டெல் இணையதளம், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மற்றும் பிற ரீசார்ஜ் தளங்களில் இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
ஏர்டெல்லின் ரூ.1,499 நெட்பிளிக்ஸ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் 5ஜி பயனர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் ஆகியவற்றை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் அப்பல்லோ (Apollo 24x7 Circle), இலவச ஹலோடியூன் மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்வையும் கிடைக்கும்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குறைந்தபட்ச சந்தா திட்டம் ரூ.199 க்குக் கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல்லின் பிளானில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கான நெட்பிளிக்ஸ் சந்தா தொகையாக 600 ரூபாயைச் சேமிக்கலாம்.
நெட்பிளிக்ஸ் மட்டும் இல்லாமல் இதே 84 நாள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு திட்டம் ரூ.999 க்குக் கிடைக்கிறது. அதில் தினசரி 2.5ஜிபி டேட்டா என்பதைத் தவிர வேறு மற்ற அனைத்தும் ரூ.1,499 திட்டத்தில் உள்ளதைப் போலவே உள்ளது.
பக்கா பேட்டரி... பவர்ஃபுல் பிராசஸர்... ரெனோ 11 சீரீஸ் மொபைல்களை களமிறக்கிய ஓப்போ!