சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா எல்1!

By SG Balan  |  First Published Sep 19, 2023, 8:54 AM IST

இதுவரை பூமியைச் சுற்றிவந்த ஆதித்யா எல்1 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விலகி L1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.


சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1, செவ்வாய்கிழமை அதிகாலை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள L1 என்ற லெக்ராஞ்சியன் புள்ளியை (Lagrange Point) நோக்கி 110 நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கான உந்துவிசையை வெற்றிகரமாக அளித்தது முடித்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.

L1  புள்ளியானது விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் ஒரு இடம் ஆகும். அங்கு நிலைநிறுத்தப்படும் ஒரு பொருள் நிலையானதாக இருக்கும். அந்த இடத்தில் விண்கலம் இயங்குவதற்கான எரிபொருள் தேவையும் குறைவாக இருக்கும்.

Latest Videos

undefined

அன்றே சொன்ன ராகுல் காந்தி... பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! வைரலாகும் பழைய கடிதம்

“சூரியன்-பூமி எல்1 புள்ளிக்குச் செல்லட்டும்!" என்று கூறி இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆதித்யா எல்1 விண்கலம் இப்போது சூரியன்-பூமி இடையேயான L1 புள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு எல்1 புள்ளியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

Aditya-L1 Mission:
Off to Sun-Earth L1 point!

The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.

The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44I

— ISRO (@isro)

இதுவரை பூமியைச் சுற்றிவந்த ஆதித்யா எல்1 விண்கலம் ஐந்து முறை இஸ்ரோ அளித்த உந்துவிசை மூலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்ந்தப்பட்டது.

முன்னதாக திங்கட்கிழமை, ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள ஆதித்யா சோலார் விண்ட் பார்ட்டிகல் எக்ஸ்பெரிமென்ட் (ASPEX) என்ற கருவியின் ஒரு பகுதியான சுப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் சென்சார்கள், ஆய்வுத் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

50,000 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள சூரியனின் வெப்பம், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் தொடர்பான அளவீடுகளைப் பதிவுசெய்யத் தொடங்கியுதாக இஸ்ரோ கூறியுள்ளது. இந்தத் தரவுகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!

click me!