5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி

By Dinesh TG  |  First Published Oct 1, 2022, 1:51 PM IST

அடுத்த 2023 டிசம்பர் மாதத்திற்குள்ளாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் பிரகதி மைதானத்தில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, இந்தியாவின் 5G சேவைகளை அறிமுகம் செய்கிறார். 5ஜி சேவைானது ஆரம்பத்தில் 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 5G தொலைத்தொடர்பு சேவைகள் தடையற்ற கவரேஜ், அதிக டேட்டா வீதம், குறைந்த தாமதம் மற்றும் மிகவும் நம்பகமான தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை கொண்டதாக உள்ளது. இந்த மாநாட்டில் ஏர்டெல், ஜியோ, விஐ நிறுவனங்கள் தங்களது 5ஜி டெமோவை சேவையை காட்டி, 5ஜி நெட்வொர்க்கின் அபரிமிதான தன்மை, அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கின்றன.

Tap to resize

Latest Videos

விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5G டெலிபோனி சேவைகள் அறிமுகப்படுத்தும் என்று கூறினார். "டிசம்பர் 2023 க்குள் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு தாலுகாவிலும் 5G வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்," என்றார்.

இன்று 5ஜி சேவை அறிமுகம்.. Jio, Vi எல்லாம் வந்தாச்சு.. என்னாச்சு Airtel 5G

மேலும், “5G என்பது அடுத்த தலைமுறை இணைப்புத் தொழில்நுட்பத்தை விட அதிக செயல்திறன் வாய்ந்தது. இது செயற்கை நுண்ணறிவு, இணைய தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள், ரோபோடிக்ஸ், பிளாக்செயின் & மெட்டாவர்ஸ் போன்ற 21 ஆம் நூற்றாண்டின் பிற தொழில்நுட்பங்களின் முழு திறனையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.

வெறும் ரூ.8 ஆயிரத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ?

நாங்கள் டெமோ காட்டியதற்கு மிகவும் பெருமைப்படுகிறோம். COAI (செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம்) மற்றும் DoT (டெலிகாம் துறை) ஆகியவற்றுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நாங்கள் தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம், மேலும் இந்திய மொபைல் காங்கிரஸ் இப்போது ஆசிய மொபைல் காங்கிரஸ் மற்றும் குளோபல் மொபைல் காங்கிரஸ் ஆக வேண்டும்”

இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.

click me!