இந்தியாவில் தற்போது 5ஜி சேவை வந்துவிட்டது. அமேசான் தளத்தில் பண்டிகை கால சலுகைகளும் நடந்து வரும் நிலையில், 20 ஆயிரம் ரூபாய்க்குள் ஆஃபரில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு காணலாம்
அமேசானின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில், SBI வங்கி கார்டு உறுப்பினர்களுக்கு 10 % உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலம், அமேசான் பே மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டு உறுப்பினர்களுக்கும் அளவில்லாத கேஷ்பேக் உள்ளது. 20,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் சிறந்த ரேட்டிங் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:
ரியல்மி நார்சோ 50 5 G
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், ரியல்மி நார்சோ 50 5 G இன் ஆரம்ப விலை 12,249 ரூபாயாக உள்ளது. இந்த ஸ்மார்ட் போனை 750 ரூபாய் தள்ளுபடி விலையில் SBI வங்கி கார்டு உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த போனில் மீடியா டெக் டைமென்சிட்டியின் 810 5G ப்ராசசர் உள்ளது. இதில் 64 GB ஸ்டோரேஜுடன் 4GB ரேமும் பின்புறம் 48MP HD அல்ட்ரா கேமராவும் உள்ளது.
ரெட்மி 11 ப்ரைம் 5G
ரெட்மி 11 ப்ரைம் 5G தள்ளுபடி விலையில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கின்றது. இது எக்சேஞ்ச் தள்ளுபடி விலையில் 12,150 ரூபாய்க்கு வர உள்ளது. வாடிக்கையாளர்கள் மாதம் 621 ரூபாயாக நோ காஸ்ட் EMI மூலமாகவும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ரெட்மி ஃபோன் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் மெயின் சென்சாரில் 50 MP இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.
இன்று 5ஜி சேவை அறிமுகம்.. Jio, Vi எல்லாம் வந்தாச்சு.. என்னாச்சு Airtel 5G
iQoo Z6 Lite 5G
அமேசான் சேலில் தற்பொழுது iQoo Z6 Lite 5G இன் புதிய மாடலானது 13,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனை வாங்குபவர்கள் SBI க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் 750 ரூபாய் தள்ளுபடி விலையாக பெற்றுக் கொள்ளலாம். இது குவால்காம் ஸ்நேப்ட்ராகன் 4 ஜென் 1 SoC அம்சம் பெற்று 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை ஆதரிக்கிறது.
அக்டோபர் மாதம் வரவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!
ஒன் ப்ளஸ் நார்டு CE 2 லைட் 5G
ஒன் ப்ளஸ் நார்டு CE 2 லைட் 5G ஆனது 18,999 ரூபாயாக தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட் போனை வாங்குபவர்கள் SBI க்ரெடிட் கார்டுகளுடன் 750 ரூபாய் தள்ளுபடி விலையாக பெற்றுக் கொள்ளலாம். இது ஸ்நாப்டிராகன் 695 SoC பிராசர் மூலம் இயங்குகிறது. 64MP முதன்மை சென்சார் மூலம் AI உதவியுடன், மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே இந்த பட்ஜெட்டில் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5G
அமேசான் ஆஃபரில் 20% தள்ளுபடியுடன் ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5G கிடைக்கின்றது. இது 19,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் SBI வங்கி கார்டுகள் மூலம் 750 ரூபாய் தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் ஃபோனானது குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 695 5G ப்ராசசர் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் உள்ளது. இது 15 நிமிட சார்ஜ் செய்தால் போதும், ஒரு நாள் முழுவதும் போனை பயன்படுத்திக்கொள்ளலாம்.