தேவையில்லாத வேலைய பார்க்கும் Facebook.. இப்போ இது ரொம்ப அவசியம் தானா?

By Dinesh TG  |  First Published Sep 30, 2022, 10:45 PM IST

Meta நிறுவனம் எழுத்து மூலம் வீடியோ என்ற புதிய தொழில்நுட்பத்தை சோதித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.


Facebook, Whatsapp, Instagram ஆகியவற்றை முதன்மையாக கொண்டு செயல்படும் நிறுவனம் Meta. ஏற்கெனவே மெட்டா நிறுவனம் Metaverse என்ற மெய்நிகர் உலகத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. இதற்கான கண்ணாடிகளும், பிற உபகரணங்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. 

அடுத்த வாரம் அறிமுகமாகும் Moto G72 ஸ்மார்ட்போன்! என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும்?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தற்போது Make-A-Video என்ற தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு கொண்டு, எழுத்து மூலம் வீடியோ அம்சமாகும். அதாவது, ஒரிரு வரிகளை எழுதினால், அந்த வரிகளுக்கு ஏற்ப தானாகவே ஒரு வீடியோ உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கப்படும் வீடியோ ஐந்து நொடிகள் கொண்டதாக இருக்கும்.

இதற்காக எக்கச்சக்கமான வீடியோ கிளிப்புகளையும், கிளவுட் வீடியோக்கள், மற்றும் கட்டுரைகளை திரட்டியுள்ளது. செயற்கை  நுண்ணறிவுக்கு இவற்றை பகுத்தறிந்து, வீடியோ உருவாக்கும் தன்மையை உட்புகுத்த முயற்சி நடைபெறுகிறது. 

ஜனவரி முதல் Google Stadia சேவை நிறுத்தம்!

ஏற்கெனவே, விர்ச்சுவல் வேர்ல்டு தொழில்நுட்பத்தில் ஆதாரவுகளும், எதிர்ப்புகளும் உள்ள நிலையில், ஃபேஸ்புக்கின் முயற்சி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. இது தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், ஆபாசமான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் வழிவகுத்திடும். எல்லாவற்றிருக்கும் மேலாக, டீப்ஃபேக்ஸ் எனப்படும், போலியான உருவத்தை உருவாக்கும் மோசடி சம்பவங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

மெட்டா நிறுவனத்தின் இந்த வீடியோ மேக் திட்டம் எந்த அளவில் உள்ளது, எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வரவில்லை. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!