
கடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் Stadia என்ற கேமிங் தளத்தை அறிமுகம் செய்தது. இதை அறிமுகம் செய்த போது, பல்வேறு சிறப்பம்சங்களை தெரிவிக்கப்பட்டது. லேட்டன்சி பிரச்சனையே இருக்காது, பயனர்கள் தங்களுடைய சொந்த லைப்ரரியில் இருந்து விளையாடலாம் என்றெல்லாம் கூறியது. லேப்டாப்பில் இருந்தும் விளையாடலம், டேப்லேட் போனில் இருந்தும் விளையாடலாம் என்றெல்லாம் கூறியது.
இந்த தயாரிப்பு இந்தியாவில் அவ்வளவு பிரபலமாக இல்லை என்றாலும், அமெரிக்காவில் பெருமளவு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், போதுமான வரவேற்பு பெறாத காரணத்தினால், வரும் ஜனவரி மாதத்தோடு ஸ்டடியா சேவை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு புறம் கூகுள் நிறுவனம் வெற்றிகரமான பல தயாரிப்புகளைக் கொண்டிருந்தாலும், மறுபுறும் சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. பயனர்களின் வரவேற்பு இன்றி, பல தயாரிப்புகள் இதே போல் சேவை நிறுத்தம் செய்யப்பட்டன.
Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!!
குறிப்பாக கூகுளின் ஆர்குட் என்ற சமூகவலைதளம் முன்னொரு காலத்தில் மிகப்பிரபலமாக இருந்தது. பின்பு, ஃபேஸ்புக் வந்ததால், பயனர்களின் கவனம் ஃபேஸ்புக் பக்கம் திரும்பியது. இதனால் கூகுள் ஆர்குட் சேவை நிறுத்தப்பட்டது. கூகுள் ஹேங்அவுட்ஸ் சேவையும் நிறுத்தி, கூகுள் சாட் என்று கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக கூகுள் டாக், ஐகூகுள், கூகுள் ரீடர், கூகுள் நோட்புக், கூகுள் லேப்ஸ், கூகுள் ஆன்ஸ்ரஸ் உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.