பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்! ஏப்ரல் 6ஆம் தேதி என்ன நடக்கப் போகுது? நாசா விளக்கம்

By SG Balan  |  First Published Apr 4, 2023, 8:39 AM IST

ஏப்ரல் 6ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல் ஒன்றைப் பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விளக்கம் அளித்துள்ளது.


பூமியை நெருங்கும் விண்கற்கள் பற்றிய எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகிவருகின்றன. அவை பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம்,  வருங்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பற்றித் தெரிவித்துள்ளது.

ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கும் என்றும் அவற்றில் இரண்டு பூமிக்கு மிக நெருக்கமான வரக்கூடியவை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. நாசாவின் ஆஸ்டெராய்டு வாட்ச் டாஷ்போர்டு விண்கற்கள் மற்றும் வால்மீன்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு விண்கல்லும் பூமியை நெருங்கும் உத்தேச தேதி, விண்கல்லின் தோராயமான விட்டம், பூமியிலிருந்து அதன் தூரம் ஆகிய விவரங்களை வெளியிடுகிறது.

Latest Videos

undefined

சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்தளை கண்டுபிடிப்பு! விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்!

2023 FZ3 என்ற அடுத்து வரவிருக்கும் மிகப்பெரிய விண்கல் ஒரு விமானத்தின் அளவு பெரியது. இது ஏப்ரல் 6 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 150 அடி அகலமுள்ள இந்த விண்கல் பூமியை நோக்கி 67656 கிமீ வேகத்தில் நகர்கிறது. பூமிக்கு மிக அருகில் வரும் இது 4,190,000 கிமீ தொலைவில் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பூமிக்கு அபாயகரமானதாகக் கருதப்படவில்லை.

வெவ்வேறு அளவுகளில் சுமார் 30,000 விண்கற்கள் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எதுவும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என்று கூறப்படுகிறது.

நமது சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போதில் இருந்து விண்கற்கள் விண்வெளியில் எஞ்சியிருக்கின்றன என நாசா சொல்கிறது. சமீபத்தில், ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவுள்ள விண்கல் ஒன்றை நாசா கண்டுபிடித்தது. அது இன்னும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் தினத்தன்று பூமியுடன் மோதுவதற்கான சிறிய வாய்ப்பு இருப்பதாகக் நாசா கணித்துள்ளது.

காப்பீடு திட்ட விதிகளில் மாற்றம்! இனி பாலிசி எடுக்கும்போது கவனமா இருக்கணும்!

click me!