வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட உரையாடலை மட்டும் லாக் செய்ய விரும்புகிறீர்களா? விரைவில் வரவிருக்கும் 'லாக் சாட்' (Lock Chat) அம்சம் அதைச் செய்ய உதவும்.
வாட்ஸ்ஆப் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் வகையில் அப்டேட்களை வழங்கி வருகிறது. இப்போது வாட்ஸ்ஆப் பயனர்கள் குறிப்பிட்ட தனிப்பட்ட சாட்டை பிறர் பார்க்க முடியாதபடி லாக் செய்ய முடியாது. ஆனால் அதற்கான வசதி விரைவில் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
கைரேகை அல்லது பாஸ்வேடு மூலம் தனிப்பட்ட சாட்களை லாக் செய்வதற்கான வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் புதிய அம்சத்துக்காக வாட்ஸ்ஆப் நிறுவன் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த லாக் செய்யப்பட்ட சாட்களை பயனர்கள் தனி பகுதியில் பார்க்க முடியும் எனத் தெரிகிறது. இதனால் பாஸ்வேடு அல்லது கைரேகை பதிவு செய்யாமல் யாரும் இந்த லாக் செய்யப்பட்ட சாட்களைப் பார்க்க முடியாது.
undefined
2 மணிநேரத்தில் பாலம் ரெடி! 3D பிரிண்டிங் மூலம் அசத்திய ஐஐடி சிவில் மாணவர்கள்!
இதுதவிர, இந்தப் புதிய அம்சம் லாக் செய்த சாட்களில் உள்ள போட்டோ, வீடியோ போன்ற மீடியா ஃபைல்களை கேலரியில் தானாகச் சேமிக்காமல் மறைத்து வைக்கவும் உதவும். இந்த வசதி ஏற்கெனவே ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான வாட்ஸ்ஆப் பீட்டா (v2.23.8.2) பயனர்களுக்குக் கிடைத்துள்ளது.
எனவே, லாக் சாட் அம்சம் விரைவில் வரவுள்ள வாட்ஸ்ஆப் அப்டேட் மூலம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தும் வசதியும் வரவுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2030க்குள் மனிதர்களின் மரணத்தைத் தடுக்கும் நானோ ரோபா! முன்னாள் கூகுள் விஞ்ஞானி குர்ஸ்வேல் தகவல்