வேற லெவல் அப்டேட்கள்.... ஸ்டைலிஷ் லுக்... 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published May 18, 2022, 2:24 PM IST

இந்த மாடல் முனிச்-இல் உள்ள பி.எம்.டபிள்யூ. குழும ஆலை மற்றும் மெக்சிகோவில் உள்ள பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் சான் லூயிஸ் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 


பி.எம்.டபிள்யூ. குழுமம் தனது அதிகம் விற்பனையாகும் கார் மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் கூர்மையான டிசைன், மேம்பட்டு இண்டீரியர் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் பவர்டிரெயின் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.

புதிய 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலின் முன்புறம் மற்றும் பின்புற பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மட்டும் இன்றி பிரீமியம் செடான் மாடலின் உள்புறம் புதிய வளைந்த டிஸ்ப்ளே, பி.எம்.டபிள்யூ.  நிறுவனத்தின் அதிநவீன ஆபரேடிங் சிஸ்டம் 8 வழங்கப்பட்டு  உள்ளது. இந்த மாடல் முனிச்-இல் உள்ள பி.எம்.டபிள்யூ. குழும ஆலை மற்றும் மெக்சிகோவில் உள்ள பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் சான் லூயிஸ் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

இந்திய சந்தையில் 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு துவக்கம் அல்லது ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

வெளிப்புற மாற்றங்கள்:

2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலின் வெளிப்புறம் ஸ்டிரக்ச்சர் செய்யப்பட்ட சர்பேஸ்கள், டைனமிக் லைன் மற்றும் பெரிய ஏர் இண்டேக் உள்ளிட்டவை காரின் முன்புறத்திற்கு இதுவரை இல்லாத அளவு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்கி இருக்கின்றன. இத்துன் ஹெட்லைட்கள் மற்றும் கிட்னி கிரில்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன. ஸ்டாண்டர்டு எல்.இ.டி. ஹெட்லைட்கள் தற்போது மிக மெல்லியதாக உள்ளன. இவை தெளிவான காண்டோர்களை கொண்டுள்ளன. இதன் டேடைம் டிரைவிங் லைட்கள் தலைகீழாக பொருத்தப்பட்டு இருப்பதால் காருக்கு அதிநவீன தோற்றம் கிடைக்கிறது.

காரின் ப்ரோபைலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலில் 17 இன்ச் லைட்-அலாய் வீல்கள் னஉள்ளன. பின்புறம் கிளீன்-அவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹாரிசாண்டல் லைன்கள், மிக மெல்லிய லைட் யூனிட்கள், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள் காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகின்றன.

இண்டீரியர்:

புதிய பி.எம்.டபிள்.யூ. காரின் உள்புறத்தில் ஸ்டாண்டர்டு பிட் பி.எம்.டபிள்.யூ. வளைந்த டிஸ்ப்ளே, 12.3 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, கண்ட்ரோல் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கியர் செலக்டர் லீவர் புது டிசைன் கொண்டிருக்கிறது. இது செண்டர் கன்சோலில் கண்ட்ரோல் பேனல் மீது பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஐ டிரைவ் கண்ட்ரோலர், டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் கண்ட்ரோல் பட்டன்கள், பார்கிங் பிரேக் போன்ற வசதிகள் உள்ளன.

என்ஜின் விவரங்கள்:

2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலில் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களே வழங்கப்பட்டு உள்ளன. இதன் பேஸ் வேரியண்ட் 330i மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 255 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. 330e பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3 லிட்டர் I6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

பாதுகாப்பு அம்சங்கள்:

2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலில் ஆட்டோமேட்டெட் டிரைவிங், பார்க்கிங் சிஸ்டம்கள் சவுகரிய அனுபவத்தை வழங்குகின்றன. இதில் முன்புற கொலிஷன் வார்னிங் மற்ரும் பிரேக் இண்டர்வென்ஷன், குரூயிஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட் டிஸ்ப்ளே, மேனுவல் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட், லேண் டிபாச்சர் வார்னிங் மற்றும் லேண் ரிட்டர்ன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

click me!