இனி சார்ஜரை தேடி அலைய வேண்டாம்... ஹூண்டாய் - டாடா பவர் புது கூட்டணி.... வெளியான மாஸ் அறிவிப்பு..!

By Kevin Kaarki  |  First Published May 17, 2022, 4:08 PM IST

இது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும். ஹூண்டாய் டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை அனைத்து எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் டாடா பவர் உடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, இந்தியா முழுக்க ஹூண்டாய் விற்பனை மையங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க் அமைக்க முடிவு செய்துள்ளன. 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அன்சு கிம் மற்றும் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீர் சின்ஹா இடையே இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள ஹூண்டாய் இந்தியா தலைமையகத்தில் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

பாஸ்ட் சார்ஜிங் மையங்கள்:

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது 29 நகரங்களில் 32 எலெக்ட்ரிக் வாகன டீலர்களை வைத்து இருக்கிறது. இங்கு 7.2 கிலோவாட் AC சார்ஜர்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்த டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை 60 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர்களாக மாற்றுவது தான். இதற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது டீலர்ஷிப்களில், இடவசதி மற்றும் நிர்வாக ஒப்புதல்களை வழங்கும். இங்கு சார்ஜிங் மையங்களை நிறுவி அவற்றை இயக்கும் பணிகளை டாடா பவர் மேற்கொள்ளும். 

இந்த கூட்டணியின் கீழ் ஹூண்டாய் டீலர்ஷிப் பகுதிகளில் பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு, எண்ட்-டு-எண்ட் சார்ஜிங் தீர்வுகள் வழங்கப்படும். இது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும். ஹூண்டாய் டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை அனைத்து எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இவை எங்கு அமைந்துள்ளன என்ற ஹூண்டாய் மற்றும் டாடா பவர் EZ சார்ஜ் மொபைல் செயலியில் அறிந்து கொள்ள முடியும். 

உயரிய இலக்கு:

“ஹூண்டாய் நிறுவனத்தின் நோக்கம், மனித குலத்திற்கான வளர்ச்சி மற்றும் எங்கள் பிராண்டின் புதிய முன்னெடுப்பு பயணங்களை கடந்து செல் திட்டங்களுக்கு இணங்கும் வகையில் டாடா பவர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, நம்பத் தகுந்த போக்குவரத்து மீது உள்ள மாய தோற்றத்தை மாற்றி, சமூக நல்லிணக்கத்திற்காக பொருளாதார நன்மை மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஹூண்டாய் நிறுவன கனவை வெளிப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.” 

“நாட்டின் காற்று மாசு இலக்குகளை அடையவும், வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தூண்டவும் இதுபோன்ற கூட்டணிகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்று ஆகும். இந்த கூட்டணி மூலம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா டீலர்ஷிப்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வழங்கும் போது ஹூண்டாய் மோட்டார் இந்தியா எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு தேசத்தின் எலெக்ட்ரிக் போக்குவரத்து கவனை அடைய முடியும்,” என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அன்சு கிம் தெரிவித்தார். 

click me!