ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்..!

By Kevin Kaarki  |  First Published May 17, 2022, 5:12 PM IST

இந்தியாவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களில் ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் டாப் 5 மாடல்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 


ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுகின்றீர்களா? உலகின் மற்ற நாடுகளை விட இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகளவு புது மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்திய சந்தையில் பலர் அடிக்கடி தங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை மாற்ற விரும்புகின்றனர். 

குறைந்த விலையில் அதிக மாடல்கள், ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் ஏராளமான சலுகைகள், எளிய மாத தவணை முறை வசதி, வங்கி சார்ந்த சலுகைகள் என பல்வேறு காரணங்களால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களில் ரூ. 12 ஆயிரம் பிரிவில் டாப் 5 மாடல்கள் எவை என தொடர்ந்து பார்ப்போம். 

5 - ரியல்மி C15: ரியல்மி நிறுவனத்தின் C15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்த மாடலில் ஆக்டா கோர் பிராசஸர், IPS LCD ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

4 - இன்ஃபினிக்ஸ் ஹாட் 10S: இன்பினிக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ஹாட் சீரிஸ் மாடல் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதில் 6.82 இன்ச் IPS LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர், 48MP பிரைமரி கேமரா, 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

3 - ரியல்மி நார்சோ 30A: ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30A ஸ்மார்ட்போனிலும் IPS LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 13MP + 2MP கேமரா, 8MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

2 - போக்கோ M2: போக்கோ நிறுவனத்தின் M2 மாடல் ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் IPS LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், 5000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

1 - சியோமி ரெட்மி 9 பிரைம்: ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், IPS LCD ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் 5020mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

click me!