140 கி.மீ. ரேன்ஜ்... 2022 டி.வி.எஸ். ஐகியூப் இந்தியாவில் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

By Kevin Kaarki  |  First Published May 18, 2022, 3:46 PM IST

இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ஐகியூப் மாடல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. 


டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2022 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் விலை ரூ. 98 ஆயிரத்து 564, எக்ஸ்- ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - டி.வி.எஸ். ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ஐகியூப் மாடல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சாலைகளில் எலெ்க்ட்ரிக் வாகனங்களால் மூன்று கோடிக்கும் அதிக கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

Tap to resize

Latest Videos

அம்சங்கள்:

2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் - சாய்ஸ், கம்ஃபர்ட் மற்ரும் சிம்பலிசிட்டி என மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரேன்ஜ், ஸ்டோரேஜ், நிறங்கள் மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் அடிப்படையில் இந்த எலெக்ர்ட்ரிக் ஸ்கூட்டரின் மூன்று வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். 

புதிய 2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகமாகவே உள்ளது.

விலை விவரங்கள்:

2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 564 ஆன்-ரோடு, டெல்லி என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690, ஆன் -ரோடு, டெல்லி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்டிற்கான இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். 

click me!