
தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட, 39பேர் பலியாகினர். மேலும் பலர் கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர் அரசியல் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறிவருகின்றர். உயிரிழந்தோருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸடாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர், எ.வ.,வேலு நேரில் சென்று சிகிச்சை இருப்பவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு பலரும் தங்களது கருத்துக்களையும், நெருக்கமான இடத்தில் அனுமதி வழங்கியது குறித்தும் சந்தேகங்களையும் எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம், அனைத்தும் திட்டமிட்ட பிளான் தான் என பிரபல யூடியூபர் பிலிக்ஸ் ஜெரால்ட் அதிர்ச்சி கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “விஜயின் பயணத்தில் இது மூன்றாவது வாரம், இதற்கு முன் இது போன்ற சம்பவங்கள் எங்கும் நிகழவில்லை.
முதல்முறையாக ஆம்புலன்ஸீல் த.வெ.க கொடி கட்டிச் சென்றது ஏன்? கொடி கட்டிய ஆம்புலன்ஸ் வந்தது எங்கிருந்து? விக்கிரவாண்டி மாநாட்டிற்கு நான் நேரில் சென்ற போது, மாநாடு முடிந்து பலமணி நேரம் கழித்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க எனக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆனது. தற்போது அது நடந்த இடத்தைவிட மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளூர் செய்தியாளர்கள், பிற மாவட்ட செய்தியாளர்கள் என அனைவரும் அங்கு கூடினர். எனது சந்தேகமே, சம்பவம் நடந்த சில நிமிடங்களில் மக்கள் கூட்டத்தை தாண்டி அவர்களால் கேமராவுடன் எப்படி செல்ல முடிந்தது?
தவிர, சிறது நேரத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியால் எப்படி விரைவாக அங்கு செல்ல முடிந்தது? காட்டூத் தீ போல எப்படி விரைவாக முதல்வர் வழிநடத்தும் வகையில் செய்திகள் எப்படி அவ்வளவு விரைவாக சென்றது என்ற கேள்வி எழுகிறது. செய்தி சேகரிக்கும் போது களத்தில் செய்தியாளர்களை வைத்து மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுமே தவிர, இப்படி திட்டமிட்ட படி அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக சென்றது சந்தேகத்தை எழுப்புகிறது.
அமைச்சர்கள் உட்பட முதல்வர் அனைவருக்கும் உள்ள அக்கறை தா.வெ.காவினருக்கு இல்லையா என்ன? தா.வெ.காவினரால் அந்த கூட்ட நெரிசலை தாண்டி செல்ல முடியாத போது, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களால் உடனடியாக எப்படி போக முடிந்தது? என்ற பல கேள்விகள் எழுகிறது”,அதனால் இது திட்டமிட்ட பிளானாக இருக்கலாம் என்ற நோக்கில் பிலிக்ஸ் ஜெரால்ட் கூறினார்.
சென்னையில் கூட ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் 20 நிமிடம் ஆகும். சென்னையில் தான் கஷ்டம் டக்குனு பத்து நிமிஷத்துல போய் சேர்றது கரூரில் பத்து நிமிஷத்துல இருந்து 20 நிமிஷத்துல ஈசியா போய் சேரலாம்.