சொந்த செலவில் சாலையை சீரமைத்த இளைஞர்… குவியும் பாராட்டுக்கள்!!

By Narendran SFirst Published Aug 24, 2022, 11:46 PM IST
Highlights

விழுப்புரம் அருகே தனது சொந்த செலவில் சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்த இளைஞருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. 

விழுப்புரம் அருகே தனது சொந்த செலவில் சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்த இளைஞருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையிலுள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வந்த இவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது தன்னுடைய வீட்டிற்குச் செல்லும் சாலையின் நிலையைக் கண்டுள்ளார். அந்த சாலை மழை காரணமாக சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனை சரி செய்ய முடிவு செய்த சந்திரசேகர், தன்னுடைய சொந்தச் செலவிலேயே சாலையை சரிசெய்துள்ளார்.

இதையும் படிங்க: விருதுநகர் பெண் கூட்டு பாலியல் கொடுமை.. உடந்தையாக இருந்த சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்

இதுத்தொடர்பாக சந்திரசேகர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், மழை நேரத்தில் நடக்கவே முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்கு அந்தத் தெரு வந்துவிடும். அதை மாற்ற நினைத்த நான், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகினேன். அதிகாரிகளோ, தற்சமயம் சாலை அமைப்பதற்கு நிதி இல்லை என்றார்கள். எனவே, என்னுடைய சொந்தச் செலவில் அந்தச் சாலையை அமைத்துக்கொள்கிறேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்கள்.

இதையும் படிங்க: கையெழுத்தானது 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்… மகிழ்ச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!!

அதன்படி மாவட்ட ஆட்சியர் மோகன் சாரிடம் அனுமதி பெற்றேன். பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து அளவீடு செய்து, திட்ட வரையறையைக் கொடுத்தார்கள். 10.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 அடி அகலம், 270 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலையை அமைத்தேன். ஆரம்பத்தில், ஏன் உனக்கு வேண்டாத வேலை? எனச் சொன்ன என் அம்மா, பின்னர் ஏதும் சொல்லவில்லை. எனக்கு, வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காகச் சேர்த்து வைத்திருந்த தொகையிலிருந்துதான் இந்தச் சாலையை அமைத்துள்ளேன். ஈஸ்வரன் கோயில் தெருவிற்குச் சாலை அமைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். 

click me!