ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு

Published : Aug 24, 2022, 09:49 PM IST
ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு

சுருக்கம்

1993 ஆம் ஆண்டு அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதையாக அமைந்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு : முடியவே முடியாது.. எச்சரித்த நீதிமன்றம் - மீண்டும் பரபரப்பு

ஓர் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நிஜ நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஆவார். 1993 ஆம் ஆண்டு அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

1993 ஆம் ஆண்டில் கடலூர் அருகே உள்ள முதனை கிராமத்தில் நிகழ்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கு தான் படத்தின் கதை, நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இந்த கொலையை ஏற்று நடத்தினார். தனக்கு வந்த மிரட்டல்களை எல்லாம் தகர்த்தெறிந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நீதி வழங்கி கொடுத்தார் நீதிபதி சந்துரு.

இந்த உண்மையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை சித்திரவதியில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும் அந்த வழக்கின் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!

அதன்படி, தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வரும் 26-ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி