கையெழுத்தானது 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்… மகிழ்ச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!!

By Narendran SFirst Published Aug 24, 2022, 6:55 PM IST
Highlights

அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14 வது ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படிங்க: ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !

ஏழு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி 4 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுனருக்கு ரூ.2,012 அதிகபட்சம் ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடத்துனரும் குறைந்தபட்சம் 1ரூ.9,965 அதிகபட்சம் ரூ.6,640 என ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

இதையும் படிங்க: திடீரென விரிசல் விடும் வீடுகள்… அச்சத்தில் மக்கள்… நீலகிரியில் நடப்பது என்ன?

இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!