
மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன். இவரது மனைவி ஜெயசுந்தரி (64). இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல காலையில் வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஜெயசுந்தரியை ஓடி வந்து மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.
வலியால் அலறல்
இதனால் வலியால் மூதாட்டி அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜெய சுந்தரியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விஷ்ணு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் காயமடைந்த விஷ்ணுவை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மூதாட்டியின் உதடை கடித்து துப்பிய வாலிபரால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.