சென்னையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி! பீதியில் பொதுமக்கள்! தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எத்தனை?

Published : Jun 04, 2025, 07:53 AM IST
corona death

சுருக்கம்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இணை நோய்களும் இறப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் வேகம் காட்டும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 4,026 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் 1,416 பேரும், டெல்லியில் 393 பேரும், மகாராஷ்டிராவில் 494 பேரும், மேற்கு வங்கத்தில் 372 பேரும், தமிழகத்தில் 215 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 135 பேரும், செங்கல்பட்டில் 24 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்தது. இதற்காக கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார். அதனுடன் சர்க்கரை நோய் மற்றும் நடுக்குவாதம் (பார்க்கின்சன்) பாதிப்பும் இருந்தது. இந்நிலையில், அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதை அடுத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கடந்த மாதம் 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் கொரோனாவுக்கு பலி

அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரத்தத்தில் கிருமித் தொற்று (செப்சிஸ்) ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக, புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை விளக்கம்

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான முக்கிய காரணம் இணைநோய்கள் தான் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் இணை நோயால் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜக, இந்து அமைப்புகளுக்கு விபூதி அடித்த திருப்பரங்குன்றம் மக்கள்..! ஒரு கடை கூட அடைக்கப்படவில்லை..
ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?