முல்லைப் பெரியாறு அணை எப்படி உள்ளது.! ஆய்வுக்கு பிறகு கண்காணிப்பு குழு சொன்ன முக்கிய தகவல்

Published : Jun 04, 2025, 07:41 AM IST
mullai periyar dam

சுருக்கம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியுள்ள நிலையில், புதிய கண்காணிப்புக் குழு அணையை ஆய்வு செய்து, அணையின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்திய குழு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா.? தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருப்பது முல்லை பெரியாறு அணை, தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணை தமிழக மற்றும் கேரளா அரசு கண்காணித்து வருகிறது. அவ்வப்போது முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற பதற்றத்தையும் கேரள அரசு கூறிவருகிறது. ஆனால் முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. பொறியியல் வல்லுநர்களும் ஆய்வு செய்து அறிக்கையை அளித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம்- முல்லை பெரியாறு நீர் வரத்து

இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 15 தினங்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் மேலாக உள்ளது. எனவே இந்த பருவம மழை காலத்தில் முழு கொள்ளளவை அணை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் புதிய கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்தக் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணை - துணை கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை புதிய கண்காணிப்பு துணைக் குழுவினர், முதல் முறையாக அதன் இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின்,பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம்,மற்றும் கேரள அரசு தரப்பில் தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு,உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மெயின் அணை, பேபி அணை, மதகுகளின் இயக்கம், கேலரி, கசிவுநீர் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக உள்ள போது ஏற்படும் கசிவு நீர் நிமிடத்திற்கு 52.12 லிட்டர் என கணக்கீடு செய்தனர்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது

அடுத்ததாக முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 6, 9ஆகிய 3 மதகுகளை இயக்கி சரி பார்த்தனர். மதகுகளின் இயக்கம் சீராக இருந்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதை துணை கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர். பின்னர் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயினுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!