பரபரப்பு: பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞர்...

Published : Sep 03, 2018, 09:12 AM ISTUpdated : Sep 09, 2018, 07:23 PM IST
பரபரப்பு: பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞர்...

சுருக்கம்

தூத்துக்குடியில், குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்தவரின் பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பதறிப்போன காவலாளர்கள் உடனே விரைந்து சென்று அவரைத் தடுத்து கைது செய்தனர்.  

தூத்துக்குடி
 
தூத்துக்குடியில், குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்தவரின் பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பதறிப்போன காவலாளர்கள் உடனே விரைந்து சென்று அவரைத் தடுத்து கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வரும் பைக் ஓட்டிகள் மீது காவலாளர்கல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அதன்படி, நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் தூத்துக்குடி மாவட்டம், வி.வி.டி.சிக்னல் பகுதியில் காவலாளர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை காவலாளர்கல் மடக்கினர். 

அவர் சாராயக் குடித்துவிட்டு பைக் ஓட்டிவந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் காவலாளர்கள் அந்த இளைஞர் மீது, "குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக'' வழக்குப்பதிந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது பைக்கையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் என்ன செய்வதென்று தெரியாமல், 'எனது பைக்கை திருப்பிக் கொடுங்கள்' என்று காவலாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு காவலாளர்கள், "கோர்டில் அபராதத்தை கட்டிவிட்டு பைக்கை எடுத்துக் கொள்" என்று ஸ்டிரிக்டா கூறிவிட்டனர். 

போதையில் இருந்த அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். காவலாளர்களும் தங்களது வாகனச் சோதனையை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மீண்டு காவலாளர்கல் இருக்கும் இடத்திற்கு கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். 

காவலாளர்கல் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, "எனது பைக்கை தராவிட்டால் தீக்குளித்து விடுவேன்" என்று தீக்குச்சியை பற்ற வைக்க முற்பட்டார். அப்போது அங்கு இருந்த காவலாளர்கள் உடனே ஓடிச்சென்று அந்த இளைஞரி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். 

பிறகு அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்தவரின் பைக்கை பறிமுதல் செய்ததால் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் வி.வி.டி.சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!