தூத்துக்குடியில் உள்ள பருத்திக்காட்டில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார் கணவன். பின்னர், தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்த கணவன், தனது குழந்தைகளுக்காக முடிவை கைவிட்டு போலீஸில் சரணடைந்து தனது தந்தை பாசத்தைக் காட்டியுள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள பருத்திக்காட்டில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார் கணவன். பின்னர், தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்த கணவன், தனது குழந்தைகளுக்காக முடிவை கைவிட்டு போலீஸில் சரணடைந்து தனது தந்தை பாசத்தைக் காட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், மும்மலைப்பட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (37). இவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இரயில்வேத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமாரி (35). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதேப் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (48). இவருக்கும், தங்கமாரிக்கும் கள்ள உறவு இருந்துவந்துள்ளது. இதனை அறிந்த ஹரி கிருஷ்ணன் இருவரையும் கள்ள உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், இவர் கேரளாவுக்கு சென்றிந்த நேரத்தில் இருவரும் பருத்திக்காட்டில் கள்ள உறவில் இருந்துள்ளனர்.
இதனை ஹரி கிருஷ்ணன் நேரில் பார்த்துவிட்டார். அதனால், ஆத்திரமடைந்த ஹரி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டார். இது தொடர்பாக ஹரி கிருஷ்ணனை காவலாளர்கள் கைது செய்தனர்.
அவரிடம் காவலாளர்கள் விசாரித்ததில் பின்வரும் தகவல் கிடைத்தது. அதில், "கேரளாவில் வெள்ள பாதிப்புகள் குறையாததால் கடந்த 21–ஆம் தேதி ஊருக்கு திரும்பினேன். என்னுடைய மனைவிக்கும், பெருமாளுக்கும் கள்ள உறவு இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தவர்கள் என்னிடம் கூறினர். இதனை நான் ஏற்கவில்லை, என் மனைவியை நம்பினேன்.
இருந்தும் இதுகுறித்து அவர்கள் இருவரிடமும் கேட்டேன். அவர்கள் அப்படியெல்லாம் எதுவும் தங்களுக்குள் கிடையாது என்று கூறினர். அப்படி எதாவது இருந்தால் அதனை கைவிட்டு விடுங்கள் என்றும் இருவரிடமும் கூறினேன்.
நான் வெல்டிங் வேலை செய்வதால் அதிக வெளிச்சத்தைப் பார்க்கிறேன். இதனால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு இரவில் தூக்கம் வருவதில்லை. இதற்காக தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் நான் தூங்க சென்றபோது என்னுடைய மனைவி எனக்கு தூக்க மாத்திரையை கொடுத்தார். அதனை நான் சாப்பிடவில்லை. இது அவருக்குத் தெரியாது. பின்னர் நான் கண்களை மூடிப் படுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது இரவு 11 மணிக்கு தங்கமாரியின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. தங்கமாரி செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியேச் சென்று பேசிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார். அப்போது நானும், குழந்தைகளும் தூங்கிவிட்டோமா என்று உறுதி செய்துவிட்டு தங்கமாரி டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றுவிட்டார்.
நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு, எனது மனைவியை பின்தொடர்ந்தேன். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பருத்திக்காட்டில் பெருமாளும், தங்கமாரியும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்தேன். எனக்கு ஆத்திரமாக வந்தது. அப்போது அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றேன்.
அதன்பின்னர் நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், என்னுடைய குழந்தைகள் என் நினைவுக்கு வந்தனர். அவர்கள் என் மீது அதிக பாசம் வைத்துள்ளனர். நானும் அவர்கள் மீது அதிகமாக பாசம் வைத்துள்ளேன். எனவே, தற்கொலை முடிவைக் கைவிட்டுவிட்டேன். குழந்தைகளுக்காக வாழ முடிவெடுத்தேன்.
அதன்பின்னர்தான் கடம்பூர் காவல் நிலையத்தில் நானாக வந்து சரணடைந்தேன்" என்று ஹரி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவரை காவலாளார்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.