
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற மகா கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த இளம் பக்திப் பாடகி 'கந்தன் கண்மணி' தியா, வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு இங்கு பக்தி இசை நிகழ்ச்சி நடத்துவது தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான இந்தத் திருத்தலத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கிய செந்திலாண்டவருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், கோவில் வளாகத்தில் முருகப்பெருமான் மீது உருக்கமான பக்திப் பாடல் ஒன்றையும் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார்