கோவையில் தனியார் பள்ளியால் திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

By Velmurugan s  |  First Published Sep 30, 2023, 5:41 PM IST

கோவை கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படாத நிலையில், நள்ளிரவில் அவ்வழியாக வந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து உயரிந்தார்.


கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த்(வயது 26). இவர் சேரன் மாநகரில்  மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் கடையை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் உயிரிழந்தார். 

Latest Videos

undefined

இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பள்ளி நிர்வாகம் சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்ட நிலையில் அந்த வேகத்தடையில் வெள்ளை நிற கோடு அல்லது ஒளிரும் விளக்குகள் என எந்தவித குறியீடும் இல்லாமல் இருந்த காரணத்தால், இரவு நேரத்தில் வேகத் தடை இருப்பது தெரியாமல் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான வெள்ளை கோடுகளை போட்டுள்ளனர்.  

30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவ்விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கோவை கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட வேகத்தடையை அதிகாரிகள் அகற்றினர்.

click me!