இப்படி செய்தால் நமக்கும் திருமாவுக்கும் என்ன வித்தியாசம்? திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு போங்க! அண்ணாமலை!

Published : Jun 28, 2025, 07:37 AM IST
annamalai

சுருக்கம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் அண்ணாமலை, இன்றைய ஆட்சியை ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு, அரசியல்வாதிகளின் போலித்தனத்தையும், மத அடையாளங்களைப் பள்ளிகளில் அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாமலை பேசுகையில்: உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து எப்படி அந்த ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். மக்களாட்சியில் இருக்கும் போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம்.

ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும்

ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது. ராமரின் வாழ்க்கையில் குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு ராமரின் பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்களை வர வேண்டும் என்பதற்காக. தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும், இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்னை வந்தால் மன்னர் துடிப்பார். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள் என்றால் கிடையாது.

ஓட்டு வாங்குவதில் பி.எச்டி பட்டம் பெற்ற அரசியல்வாதிகள்

ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும். என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார். தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும் போது, தேர்தல் முடிந்து ஒராண்டு எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும். எப்படி நைசாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் சில அரசியல்வாதிகள் பிஎச்டி பட்டம் பெறும் அளவுக்கு அரசியல்வாதிகள் தெளிவாகி விட்டார்கள்.

திருமாவளவன் மீது அட்டாக்

பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போது பொட்டை அழித்தும், பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வரும் போது பொட்டு வைத்து கொண்டும் இருந்தால், நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்?அனைவரும் சமம். ருத்ராட்சம் போடாதே, திருநீறு குங்குமம் வைக்காதே என்று பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் அது மதச்சார்பின்மை கிடையாது. நம்முடைய மத அடையாளத்தை நாம் இடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும். குழந்தைகளுக்கு நம்முடைய மத அடையாளங்களை வைத்துவிடுங்கள், மற்ற மதமும் முக்கிய என்பதையும் சொல்லிக் கொடுங்கள். மற்ற மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.

திருநீறு, ருத்ராட்சம் அணிக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும்

குழந்தைகள் திருநீறு, ருத்ராட்சம் அணிக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு என்னுடைய குழந்தை திருநீறு வைத்துவிட்டுபோகாது என்று நினைத்தோம் என்றால் எந்த இந்து மத தர்மத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு பெண் குழந்தை பொட்டு வைத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு போகமுடியவில்லை என்றால் அப்படி அந்த பெண் சனாதன தர்மத்தை காப்பாற்றும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!