உலக சதுப்பு நில தினம் 2024.. இந்தியாவிற்கு முன்னோடியாகும் தமிழகம் - 115 கோடியில் உருவாகும் புதிய திட்டம்!

By Ansgar R  |  First Published Feb 1, 2024, 9:31 PM IST

World Wetlands Day 2024 : உலக சதுப்பு நில தினம் நாளை பிப்ரவரி 2ம் தேதி உலக அளவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த உலக சதுப்பு நில தினத்தில், தெற்காசியாவிலேயே இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்தியாவில் 80 ராம்சார் தளங்கள் சுமார் 1.33 மில்லியன் ஹெக்டேர் அளவில் பரவியுள்ளது.


"நமது பூமியின் இருப்புக்கு ஈரநிலங்கள் மிகவும் முக்கியம், ஏனென்றால் பல பறவைகள் மற்றும் விலங்குகள்
அவர்களை சார்ந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்துடன், வெள்ளக் கட்டுப்பாட்டையும் உறுதி செய்கின்றன சதுப்பு நிலங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இந்தியாவிலேயே 16 ராம்சார் தளங்களோடு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஒரு விரிவான பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு எடுக்கவுள்ளது உள்ளது. "தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கம்" என்ற ஒரு இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. 100 சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் மறுசீரமைப்புக்கு சுமார் 115.15 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

சிறப்பான வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம்.. தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டு - ஆர்.என்.மஞ்சுளா!

இதுவரை தமிழகத்தில் 14 ராம்சார் தளங்கள் இருந்த நிலையில், மேலும் இரண்டு இடங்களுக்கான பரிந்துரைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு இரு புதிய ராம்சார் தளங்களாக கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் லாங்வுட் ஷோலா
ரிசர்வ் காடு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. இட்டன மூலம் தமிழகத்தில் இனி 16 ராம்சார் தளங்கள் இருக்கும், இது இந்திய நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும்.

அரியலூரில் தான் இப்பொது புதிதாக அறிவிக்கப்பட்ட கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உள்ளது.
சுமார் 453.7 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது அந்த சரணாலயம். மேலும் இந்த சதுப்புநில காடுகளில் சுமார் 500 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்கின்றன. இந்த சரணாலயம் மத்திய ஆசிய வான் பாதையில் அமைந்துள்ளது, மற்றும் நீர் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான இனப்பெருக்கம் இடமாக இது திகழ்கின்றது. இந்த சதுப்புநில காடுகள் அப்பகுதி நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவுகிறது.

மேலும் லாங்வுட் ஷோலா காப்புக்காடு நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, இது சுமார் 116.007 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த தளம் 700க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாசிக்க வாழ்விடமாக உள்ளது. இந்த தளத்தில் காணப்படும் 177 பறவை இனங்களில் 14 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன.

"இந்தியா வளர்ந்த நாடாக மாற அடுத்த படி".. இடைக்கால பட்ஜெட் 2024 - 25 - பிரதமருக்கு புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

click me!