"இந்தியா வளர்ந்த நாடாக மாற அடுத்த படி".. இடைக்கால பட்ஜெட் 2024 - 25 - பிரதமருக்கு புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

By Ansgar RFirst Published Feb 1, 2024, 8:53 PM IST
Highlights

Annamalai Praised PM Modi : இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - 25 வெளியிட்டுள்ளார். இதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் "மக்களை காக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி" என்ற தலைப்பில் பல விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளார். மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியில் உலக அளவில் இந்தியா இன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 

பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதும் நமது பிரதமரின் ஊழலற்ற நல்லாட்சிக்கான சாட்சி.

Latest Videos

கடந்த பத்து ஆண்டுகளில் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு துறை, தொழில்துறை, சுற்றுலாத்துறை, நாட்டின் உட் கட்டமைப்பு வசதிகள் என அனைத்து துறைகளும் பல மடங்கு முன்னேறி இருக்கின்றன. சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் போக்குவரத்து வசதிகள் இன்றி, மின்சாரம் இன்றி இருந்து கிராமங்கள் அனைத்திலும் இன்று அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை! வெளியான முதல் வீடியோ... எதிர்க்கும் முஸ்லீம்கள்!

குறிப்பாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இந்த நாட்டின் பிற பகுதிகளோடு போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். அடுத்தபடியாக இன்றைய தினம் நமது மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2024 - 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டை ஒரு வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் படியாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது என்றார் அவர்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்று நான்கு ஜாதியினரையும் மேம்படுத்துவதில் மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இந்த இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தி உள்ளது பிரதமரின் அன்ன யோஜனா போன்ற மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் நாட்டின் 80 கோடி மக்களுக்கு உணவளிப்பது மட்டுமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியுள்ளது. 

வீட்டின் மேற்கூரைகளில் லேசர் தகடுகள் அமைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவசம் மின்சாரத்தை அறிவித்ததற்காக நமது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 11,11,111 கோடி நிதி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளில் ரயில்வே விமான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து சுற்றுலா மற்றும் எரிசக்தி துறைகளில் பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரும்பங்கு வகிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடி நிதியானது தனியார் துறையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஆதரிக்க வைப்பதாக அமையும் இது நமது ஆத்மனிபர் எனும் சுயசார்பு பாரதம் என்ற முன்னெடுப்பையும் பல மடங்கு ஊக்குவிப்பதாக அமையும்.

விக்சித் பாரத் திட்டத்தின் மூலம் புதிய சீர்திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வசதியாக 50 ஆண்டுகால வட்டி இல்லா கடனாக 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் மேலும் 2019 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியான ரூபாய் 11.45 லட்சம் கோடியிலிருந்து தற்போது 202425 ஆம் ஆண்டில் ரூபாய் 22.75 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதும் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் நற்பணிப்புக்கான சான்று ஆகும் என்று தமிழக பாஜகவின் மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நில மோசடி உள்ளிட்ட பல வழக்குகள்.. தொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மன் - முன்னாள் முதல்வரை சிறையில் அடைக்க உத்தரவு!

click me!