தமிழ் பயிற்று மொழியாக எப்போது மாறும் ? தலையில் அடித்து கதறும் ராமதாஸ்.! காத்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் !

By Raghupati R  |  First Published Sep 6, 2022, 5:09 PM IST

தமிழைப் பயிற்று மொழியாக்கும் சட்டத் திருத்தத்தையும், தமிழைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாகக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது.


தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழார்வலர்களின் 30 ஆண்டு கால கனவு ஆகும். ஆனால், இந்தக் கனவு மட்டும் கைக்கெட்டாமல் தொடுவானம் போல விலகிக்கொண்டே செல்கிறது. அதற்குக் காரணம் தமிழைப் பயிற்றுமொழியாக்க எந்த அரசும் முழு மனதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

நெருக்கடி நிலை நடைமுறைக்கு வரும் வரை தமிழ்நாட்டில் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்தமாகவே 29தான் இருந்தன. அதன்பிறகு தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்று தொடங்கும் அளவுக்கு புற்றீசல் போன்று ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதனால் 1990-களின் தொடக்கத்தில் பயிற்று மொழி என்ற நிலையிலிருந்து தமிழ் படிப்படியாக மறையத் தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..திராவிடியன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

தமிழ் பயிற்றுமொழியாக இல்லாவிட்டால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும் என்பதில் தொடங்கி கலாச்சார அடிப்படையிலான பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்பதால்தான், அனைத்துவிதப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரையிலாவது தமிழைப் பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விசயமாகும்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி பேசா நோன்பு மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவது சாத்தியமே. தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆட்சியாளர்கள், தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட தமிழ் பயிற்று மொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது முரணாக உள்ளது. 

தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து தமிழ் பயிற்று மொழி சட்டத்தை அடுத்த பேரவைக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும்' என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக

click me!