அடுத்த மாசம் கல்யாணத்த வச்சிக்கிட்டு இப்படி போயிட்டியே ராசா!பத்திரிகை கொடுக்க சென்றபோது ரயிலில் விழுந்து பலி

By vinoth kumar  |  First Published Sep 6, 2022, 4:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல்(25) பொறியாளராக உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.


திருமண அழைப்பிதழோடு சென்னைக்கு சென்ற பொறியாளர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல்(25) பொறியாளராக உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

Latest Videos

மதுரை அருகே தேனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது கிறிஸ்டியன் டேனியல் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக வந்தார். அப்போது ரயில் குலுங்கும்போது எதிர்பாராத விதமாக கிறிஸ்டியன் டேனியல் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு கிறிஸ்டியன் டேனியல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்டியன் டேனியல் பலியானது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. புதுமாப்பிள்ளை பலியானது குறித்து தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் கிறிஸ்டியன் டேனியலின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

click me!