கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையின் அறிவிக்கையின்படி 01.08.2022 முதல் 04.08.2022 வரை அதி கனமழை பெய்ய உள்ளதாக (Red Alert) - முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- கனமழை எதிரொலி - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
அங்கு நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு தெருக்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தற்பொழுது அதி தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சாலை மார்க்கமாக தேசிய பேரிடர் மீட்பு படை 4 குழுவினர் விரைந்துள்ளனர்.
மேலும், வரும் 4ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. ரெட் அலர்ட் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையின் அறிவிக்கையின்படி 01.08.2022 முதல் 04.08.2022 வரை அதி கனமழை பெய்ய உள்ளதாக (Red Alert) - முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெள்ள சேதவிபரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விபரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமின்றி செயல்படும் தொலைப்பேசி எண் 1077 மற்றும் 04652 - 231077 - க்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- மக்களே உஷார் !! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை..