கராத்தே போட்டியில் சாம்பியன் வென்ற மகளிர் கல்லூரி மாணவிகள்; குவிந்த பாராட்டுகள்...

Asianet News Tamil  
Published : Feb 21, 2018, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
கராத்தே போட்டியில் சாம்பியன் வென்ற மகளிர் கல்லூரி மாணவிகள்; குவிந்த பாராட்டுகள்...

சுருக்கம்

Women College Girls won the championship in karate ...

திருவாரூர்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்தன.

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி பிப்ரவரி 18-ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு உடல் எடைப் பிரிவின் கீழ் நடத்தப்பட்ட பெண்களுக்கானப் போட்டியில்,  திருவாரூர் மாவட்டம், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி கராத்தேப் பிரிவு மாணவியர் 45 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் 11 தங்கம்,11 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 33 பதக்கங்கள் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

இதனையொட்டி, இந்த மாணவியர்களுக்கு, பயிற்சியாளர் கே.ராஜகோபால், உடற்கல்வி ஆசிரியர் ஜி.புஷ்பா ஆகியோர் கல்லூரி தாளாளர் வி.திவாகரன், முதல்வர் சீ.அமுதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் வெகுவாக பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!