இளம்பெண் ஒருவர் முருகனின் திருவுருவப்படத்தை தனது மார்பில் டாட்டூவாக வரைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கின்றனர். தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாக முருகன் இருந்து வருகிறார். முருகனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்று ஆன்மீக சான்றோர்கள் கூறியுள்ளனர்.
முருகப்பெருமான் மீதான அன்பை அவரின் பக்தர்கள் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் முருகப்பெருமானுக்கு உரிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபடுகின்றனர். சிலர் முருகப் பெருமானின் கோயிலுக்கு சென்று அவரை வணங்கி வருகின்றனர்.
முருகன் மீதான அதீத பக்தியை வெளிப்படுத்தும் வகையில் முருகன், வேல் ஆகியவற்ற தங்கள் உடலில் சிலர் பச்சைக்குத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளம்பெண் ஒருவர் முருகனின் திருவுருவப்படத்தை தனது மார்பில் டாட்டூவாக வரைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடவுளின் உருவப்படத்தை எப்படி மார்பகத்தில் வரையலாம் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே நேரம் கடவுளால் படைக்கப்பட்ட இந்த உடலில் கடவுளின் திருவுருவப் படத்தை வரைய எந்த தடையும் இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
Nagapattinam: 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை; உறவினர்களின் நச்சரிப்பால் தம்பதி விபரீத முடிவு?
இதே போல் ஒரு ஆண் தனது உடலில் கடவுளின் திருவுருவப்படத்தை வரைந்தால் யாரும் கேள்வி கேட்பதில்லை என்றும், இந்த ஆணாதிக்க சமூகம் ஒரு பெண் இதே போன்று செய்தால் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஒரு பெண் தனது மார்பில் முருகர் படம் வரைஞ்சா அதை அசிங்கம், கலாச்சார சீரழிவுன்னு கத்துவோம். ஒரு ஆண் தனது நெஞ்சில் கடவுளின் படம் வரைந்து வீடியோ போட்டால் அதற்கு எந்த எதிர்ப்பு வருவது இல்லை. இவர்களை பொறுத்தவரை பெண் மார்பு என்பது அசிங்கமான பகுதி, அங்கு கடவுள் படம் வரைந்தால் கடவுள் கோபப்படுவார். மார்பை காட்டும் அந்த பெண்ணுக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னும் சிலரோ ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கடவுளை எப்படி வணங்க வேண்டுமோ அப்படி தான் வணங்க வேண்டும். உடலின் கண்ட இடத்தில் கடவுளின் படத்தை பச்சை குத்தி அசிங்கப்படுத்தக்கூடாது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.