வேலூரில் நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணின் சேலை முந்தானை ஓடும் இரயில் என்ஜினில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதில் இரயிலில் அடிப்பட்டு அப்பெண் கணவர் மற்றும் மகள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்
வேலூரில் நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணின் சேலை முந்தானை ஓடும் இரயில் என்ஜினில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதில் இரயிலில் அடிப்பட்டு அப்பெண் கணவர் மற்றும் மகள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
undefined
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, ஏரியமின்னூரில் வசிப்பவர் பாபு (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி மகேஸ்வரி (35). மகள் கோக்கிலா.
மகேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி பாபு, மகேஸ்வரி மற்றும் கோகிலா. மூவரும் நேற்று காலை 6.30 மணியளவில் வாணியம்பாடி இரயில் நிலையத்திற்கு வந்தனர்.
மூவரும் இரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த இரயிலின் என்ஜினில் மகேஸ்வரியின் சேலை முந்தானை சிக்கியது.
இதில் நிலைத்தடுமாறிய மகேஸ்வரி ஓடும் இரயிலில் சிக்கி அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகேஸ்வரி இறந்ததைப் பார்த்து கணவர் பாபுவும், மகள் கோகிலாவும் கதறி அழுதனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவலாளர்கள் மகேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர், மகள் கண்முன்னே பெண் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.