இந்து முன்னணி கட்சி நிர்வாகி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் பைக் திருட்டு; காவல்துறைக்கு இப்படியொரு சோதனையா?

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 27, 2018, 8:27 AM IST
Highlights

வேலூரில் இந்து முன்னணி கட்சி நிர்வாகி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் பைக் திருடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
 

வேலூர்

வேலூரில் இந்து முன்னணி கட்சி நிர்வாகி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் பைக் திருடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் இந்து முன்னணி கட்சியின் வேலூர் கோட்டச் செயலாளர். இவருக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வேலூரில் உள்ள காட்பாடி, இலத்தேரியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் கருணாகரன் (33). இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக மகேஷ் குமார் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் மகேஷ் குமார் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் கருணாகரன். நேற்று அதிகாலை பார்த்தபோது மகேஷ் குமார் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருணாகரனின் பைக்கை காணவில்லை. 

பதறிப்போன கருணாகரன் பைக்கை அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால், பைக் கிடைக்கவில்லை. பின்னர், பைக் திருடுப் போனதை உணர்ந்த கருணாகரன் இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உடனே புகார் கொடுத்தார்.

பைக் திருடுப் போனது தொடர்பாக வழக்குப் பதிந்த காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

இந்து முன்னணி கட்சி நிர்வாகியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் பைக் திருடுப் போன சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!