வேலூரில் தனது அண்ணனை காதலிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று பிளஸ்-2 மாணவியை மிரட்டிய தம்பியை காவலாளர்கள் கைது செய்தனர். அண்ணன், தம்பி இருவரும் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர்
வேலூரில் தனது அண்ணனை காதலிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று பிளஸ்-2 மாணவியை மிரட்டிய தம்பியை காவலாளர்கள் கைது செய்தனர். அண்ணன், தம்பி இருவரும் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் வசிப்பவர் பலராமன். இவருக்கு சக்திவேல் (24), அருண்குமார் (22) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணன், தம்பி இருவரும் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
குடியாத்தத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருவரை சக்திவேல் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவருடைய காதலை அம்மாணவி ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த சக்திவேல் தனது காதல் குறித்து அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அருண்குமார், அம்மாணவியை நேரில் சந்தித்து, "தனது அண்ணனை காதலித்தாக வேண்டும்" என்றும் தனது செல்ஃபோனை கொடுத்து, "அண்ணனிடம் உன் காதலை தெரிவி" என்றும் வற்புறுத்தியுள்ளார். அதற்கும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார் அம்மாணவியை, என் அண்ணனை காதலிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன்" எண்ட்ஃப்ரு மிரட்டி உள்ளார்.
இதனால் பதறிப்போன மாணவி அங்கிருந்து ஓடிவந்துவிட்டார். பின்னர், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பெற்றோரும் அருண்குமார் குறித்து பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், இராணுவ வீரர்களான அருண்குமார் மற்றும் சக்திவேல் இருவர் மீதும் ‘ஃபோக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருண்குமார் கைதுச் செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் காவலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர்களான இருந்துகொண்டு காதலிக்குமாறு வற்புறுத்துவதும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் படுகேவலம் என்று இதுகுறித்த அறிந்த அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.