விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்னங்க கமல் இப்படி சொல்லிட்டாரு! நீங்களே பாருங்க!

Published : Sep 21, 2025, 04:17 PM IST
vijay kamal haasan

சுருக்கம்

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். 

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள குறைகளை பட்டியலிட்ட விஜய், இந்த மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார்.

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?

விஜய் தேர்தல் பிரசாரம் செய்த நாகையிலும், திருவாரூரிலும் தவெக தொண்டர்கள் அலை அலையாக திரண்டு வந்தனர். குறிப்பாக ம்றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோட்டையாக கருதப்படும் திருவாரூரில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இது ஒருபக்கம் இருக்க, ''விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஒரு நடிகரை பார்க்க திரண்ட கூட்டம். இந்த கூட்டம் ஓட்டாக மாறாது'' என்று திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் கூட்டம் ஓட்டாக மாறாது

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், ''கண்டிப்பாக மாறாது. இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். இது எனக்கும் பொருந்தும். விஜய்க்கும் பொருந்தும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் கூட்டம் சேர்ந்து விட்டால் மட்டும் அது ஓட்டாக மாறாது'' என்று தெரிவித்தார்.

விஜய்க்கு கமல் அட்வைஸ்

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ''விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள். இதுதான் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். நான் ஒரு சாதாரண மக்களாக இருந்தால் எங்களையும் பாருங்கள்; எங்களுக்கு செய்யுங்கள். நாங்கள் உங்களை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே வைப்போம் என்று சொல்லுவேன்'' என்று கூறினார்.

நேற்றே பதில் அளித்த விஜய்

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என பல்வேறு தரப்பினரும் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் நேற்று பதில் அளித்து இருந்தார். அதாவது அவர் திருவாரூரில், 'நண்பா. ஒரே ஒரு டவுட். எங்க போனாலும் இது சும்மா கூட்டம், ஓட்டு போட மாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா?' என்று கேள்வி கேட்டார். இதற்கு தவெக தொண்டர்கள் டிவிகே டிவிகே என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!