வடிவேலுவை விட விஜய்க்கு கூட்டம் குறைவுதான்..! ஜெயிக்க முடியாது.. ஜவாஹிருல்லா ஆவேசம்

Published : Sep 21, 2025, 12:34 PM IST
Jawahirullah

சுருக்கம்

கடந்த காலங்களில் விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது வடிவேலுவால் வெற்றிபெற முடியவில்லை என்று விஜய் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும், வக்ப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்ஃபு திருத்த சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.

வக்ஃபு திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு வழங்கிய தீர்பு பாரபட்சமாக அமைந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி உட்பட திமுக, காங். உட்பட பல்வேறு கட்சிகள் அந்த வழக்கில் இணைந்திருந்தார்கள். இந்த வழக்கில் முஸ்லீம் அல்லாதவர்கள் வக்ஃபில் இடம்பெறலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்து அறநிலையத்துறை அறக்கட்டளை, சீக்கிய குரூதுவாரா நிர்வாகத்தில் அந்த மதத்தை சாராதவர்கள் இடம்பெற முடியாது.

முஸ்லீம்கள் யார் என்பதை வரையரை செய்யும் பொறுப்பை மாநில அரசுக்கு உரிமை வழங்கியிருப்பது அபத்தமானது. பல்வேறு மாநிலங்களில் பாஜ உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய நிலையில் அவர்களுக்கு விரும்பபக்கூடியவர்களை முஸ்லீம்கள் என்று வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மட்டுமே வக்ஃபு செய்யும் நிலையை உருவாக்கும். இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வழக்குதொடர்ந்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதி விசாரணை நடக்கும் போது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட 400 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ பிரிவு, அரசியல் அமைப்பு சட்டம் 324 பிரிவை சொல்லுகிறார்கள். 29ஏயில் எங்கேயும் பதிவு செய்யப்பட்ட ஒருகட்சியை பதிவை நீக்கலாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 2000ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுதலாக மோசடித்தனமாக தவறான தகவல்களை கொடுத்து ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டால் அந்த பதிவை ரத்து செய்யலாம் என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பதிவு செய்யப்பட்ட கட்சிகளை ரத்து செய்யக்கூடிய உரிமையை கொடுக்கவில்லை. ஜனநாயக உரிமையை பறிக்கக்கூடியதாக உள்ளது.

மமக 2009 முதல் பதிவு செய்யப்பட்டு பல்வேறு தேர்தல்களில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் சொந்தசின்னத்தில் போட்டியிட்டு பேரூராட்சி, ஊராட்சி, மாநாகராட்சி தலைவர் உறுப்பினர்களாக பலர் இருந்துள்ளனர். தேர்தல் ஆணையம் பற்றி எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் உள்ள அபத்தங்களை தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார். அதனை திசைதிருப்புவதற்காக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. 30 நாள் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் கொடுத்துள்ளது. நிச்சயம் மேல்முறையீடு செய்து வௌ்வோம்.

தவெக தலைவர் விஜயை காண்பதற்கு அதிக அளவில் கூட்டம் வந்திருக்கிறது. கடந்த காலங்களில் நடிகர் வடிவேலுக்கு அதிக கூட்டம் வந்தது அவரால் வெற்றிபெற முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!