இவரை மீறி திருவாரூரில் எந்த அணிலும் வாலாட்ட முடியாது..! பூண்டி கலைவாணனின் அதரவாளர்கள் கொக்கரிப்பு

Published : Sep 21, 2025, 10:23 AM IST
Poondi Kalaivanan

சுருக்கம்

TVK Vijay: திருவாரூரில் பிரசாரம் செய்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த பூண்டி கலைவாணனின் குடும்பம் திமுகவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இவரது அண்ணன் பூண்டி கலைச்செல்வன், திருவாரூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக இருந்தவர். கலைச்செல்வன் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரடாச்சேரி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இது கலைவாணனின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கலைச்செல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கலைஞர் இடத்தில் கலைவாணன்

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகன் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுவார். கருணாநிதி இடத்தில் ஸ்டாலின் தான் வரவேண்டும் என்று பேச்சுகள் எழுந்தன. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். அந்த அளவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் கலைவாணன்.

திருவரூரின் அசைக்க முடியாத சக்தி

2019ம் ஆண்டைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார். பூண்டி கலைவாணனின் அரசியல் தொடக்கம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. அவர் திருவாரூர் மாவட்டத்தில் கட்சியின் இளைஞரணி மற்றும் மகளிர் அணிகளில் செயல்பட்டு, கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

செல்வாக்குமிக்க தலைவர்

பூண்டி கலைவாணனுக்கு அவரது சாதிய பின்பலம் பக்கபலமாக அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பிரதமானமாக இருக்கக்கூடிய ச­மூகத்தச் சேர்ந்தவர் என்பதால் இவர் அப்பகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார்.

திருவாரூரில் விஜய்..

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வரும் பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் கலைவாணனை மீறி திருவாரூரில் யாராலும் வாலைக்கூட ஆட்ட முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!