டிச. 18 முதல் 21 வரை.. சென்னையில் மீண்டும் கனமழை? வானிலை நிலவரம் எப்படி இருக்கு?

By Ramya s  |  First Published Dec 12, 2023, 12:23 PM IST

வரும் 18 முதல் 21 வரை வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்சாரம், தொலைதொடர்பு வசதி இல்லாமல் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டர்னர். குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், மடிப்பாகம், தாம்பரம் முடிச்சூர், வண்டலூர் போன்ற புறநகர் பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

இதையடுத்து போர்க்கால அடிப்படையில் மீட்புபணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் இன்னும் ஒரு சில இடங்கள் தண்ணீர் வடியாமல் இருப்பதால் அந்த நீரை அகற்றும் பணி திவீரமாக நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இப்போது தான் சென்னை மீண்டு வருகிறது. மழை அறிவிப்பு என்று சொன்னாலே அச்சப்படும் நிலையில் தான் சென்னை மக்கள் உள்ளனர்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் வரும் 18 முதல் 21 வரை வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்..  தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை வரை காற்று சுழற்சி நிலவி வருகிறது. இந்த லேசான டிசம்பர் 14, 15 தேதிகளில் காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கனமழை இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

Both GFS and ECM reaching similar consensus and projecting rains for coastal Tamilnadu including region next week(Dec 18-21) ! pic.twitter.com/Ct9vwdQ853

— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather)

 

இதை தொடர்ந்து காற்று சுழற்சி தீவிரமடையும் பட்சத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் குறிப்பாக சென்னை மற்றும் புறககர், பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்ற்னர். மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும். மழை அளவு பற்றிய முன்னறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்தில் தெளிவாகத் தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் இந்த 3 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்.!

டிசம்பர் 20 முதல் ஜனவரி முதல் வாரம் வரை காற்று சுழற்சிகள் உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர். எனினும் வானிலை மையம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

click me!