மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணமல் மற்றும் சேதமடைந்த நிலையில், அதற்கு பதிலாக புதிய ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை வெள்ள பாதிப்பு- மாயமான அடையாள அட்டை
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ. மீட்டர் மழை பெய்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் இருந்த நீர் நிலைகள் நிரம்பி வழிந்து ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஆதார், ரேஷன் கார்டு, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ் சேதம் அடைந்தது. இதனையடுத்து மீண்டும் சான்றிதழ்களை பெறுவவதற்கான சிறப்பு முகாகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
undefined
அடையாள அட்டை- சிறப்பு முகாம்
அதன் படி மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை ,பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து,
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் (1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் 12-12-2023 (செவ்வாய்க் கிழமை) இன்று சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 46 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்களது சான்றிதழை திரும்ப பெறுவதற்காக முகாமில் குவிந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்