வெள்ள பாதிப்பால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டி கையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படு வது வழக்கம். அதேபோல் அடுத்த மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு திடீர் முட்டுக்கட்டை போட்டது. இதனையடுத்து சென்னைஉள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16-ந்தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.
பொங்கல் பரிசு- அதிகரிக்க திட்டம்
ரேஷன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், ஜனவரி பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொருடகள் தரமாக இல்லையென புகார் வந்ததையடுத்து கடந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் கரும்பும் வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் இல்லாமல் பணமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை காண பொருட்கள் இதுவரை கொள்முதல் செய்யப்படாத நிலையில் ரொக்கப் பணம் வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் 1000ரூபாயை அதிகரித்து வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,
விரைவில் வெளியாகும் அறிவிப்பு
இந்த நிலையில் 2.19 கோடி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகை அதிகரித்து வழங்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்