
வீடுகளுக்குள் புகுந்த ஆயில்
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில், வட சென்னை பகுதியில் மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்தால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. மேலும் கடலில் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவிந்தது. இதனையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.
சிபிசிஎல் நிறுவனமே காரணம்
இதனிடையே எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என கண்டறிய பசுமை கட்டுப்பாட்டு வாரியம் குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு சிபிசிஎல்நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன் படி, எண்ணெய் கலந்த இடங்களின் மறுசீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். எண்ணெய் வெளியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.
இழப்பீடு வழங்க உத்தரவு
மேலும் குழாய்களில் கசிவு இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் ஆலை மூடப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படித்தியதற்கு நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க வேண்டும். என மாசு கட்டுப்பாடு வாரியம் CPCL நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. . கேஸ், கோர்ட்டுனு போனா நீங்க இருக்க மாட்டிங்க’ என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து மூன்று ரவுடிகளையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது 2 ரவுடிகளும் வழுக்கு விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
இன்று முதல் 17ம் தேதி வரை மழை அலறவிடப்போகுதாம்.. அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!