பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடிகள்.! போலீஸ் விசாரணையில் வழுக்கி விழுந்து கால் உடைந்ததில் மாவுகட்டு

Published : Dec 12, 2023, 08:55 AM ISTUpdated : Dec 12, 2023, 09:09 AM IST
பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடிகள்.! போலீஸ் விசாரணையில் வழுக்கி விழுந்து கால் உடைந்ததில் மாவுகட்டு

சுருக்கம்

பேக்கரியில் பெண்ணிடம் பட்டா கத்தியை காட்டி பணம் பறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரவுடிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் இரண்டு பேருக்கும் காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.   

கத்தியை காட்டி பணம் பறிப்பு

கடைகள் மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பேக்கரி ஒன்றில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரின் மனைவி கடையில் பணியில் இருந்துள்ளார்.

 

அப்போது கடைக்கு வந்த 3 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் தங்களிடம் பணம் இல்லையென கூறியவுடன், கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். தொடர்ந்து ‘காசு கொடுக்கலைனா, கடையை உடைச்சிடுவோம்’ என்று மீண்டும் மீண்டும் பட்டாக் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பயந்த அப்பெண் 1000 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த மூன்று ரவுடிகளும்கடையில் "கேமரா வச்சிருக்கியா. போலீஸ்கிட்ட போனால் உன்னையும் உன் புருஷனையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பி சென்றவர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது

வழுக்கி விழுந்ததில் மாவு கட்டு

. இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது வழுக்கி விழுந்து கால் உடைந்தது. இதனையடுத்து அந்த ரவுடிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவு கட்டு போட்டு சிறையில் அடைத்தனர். 

இதையும் படியுங்கள்

எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை! தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள்! விஜயபாஸ்கர் வேதனை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து திருமாவளவன் அதிரடி பிரச்சாரம்! | VCK
அதிமுக உள்கட்சி மோதல் குறித்து கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசம்! | K.A. Sengottaiyan | TVK