
நீலகிரி
பெரியகல்லூறு எஸ்டேட் பகுதியில் உள்ள தபால் நிலையத்தை யானைகள் இரவு நேரத்தில் சூறையாடியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகளின் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து உள்ளது.
காட்டுப் பகுதிக்குள் இரவு நேரங்களில் வெளிவே வரும் காட்டு யானைகள், தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிக்குள் ஐந்து காட்டு யானைகள் நுழைந்தன.
அவை, அங்குள்ள தபால் நிலையத்தின் கதவு, சாளரம், மேற்கூரையை என சூறையாடி சேதப்படுத்தின. இதில், தபால் நிலையம் இருந்த இடம் தெரியாமல் நாசமாயின.
நேற்று காலை இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச் சரக வனத் துறையினர் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டனர். பின்னர், யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.