
நாமக்கல்
நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருள்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் நேரில் ஆய்வு நடத்தினார்.
பரமத்தி வேலூர் வட்டாரத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கபிலர்மலை அருகே இருக்கூர், கபிலக்குறிச்சி, பிலிக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், ஜேடர்பாளையம், அ. குன்னத்தூர் உள்ளிட்ட கிராமக் கூட்டுறவு அங்காடிகளில் உள்ள அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் மற்றும் பதிவேடுகளையும் ஆட்சியர் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க வந்த மக்களிடம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதைக் கேட்டறிந்தார்.
மேலும், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடை அளவு குறையாமலும், தகுதியின் அடிப்படையில் முழுமையாக வழங்கிட வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர், பர்வின்பேகம், பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, பறக்கும் படை துணை வட்டாட்சியர் கதிர்வேல் உள்ளிட்ட வழங்கல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.