அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் மனைவிக்கும் தண்டணை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

By SG Balan  |  First Published Jun 2, 2024, 11:35 AM IST

க்திவேல் விசாரணையின் போது இறந்துவிட்டதால், அவரது மனைவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றும் தனது கணவர் லஞ்சம் பெறுவதைத் தடுப்பது ஒரு அரசு ஊழியரின் மனைவியின் கடமை என்றும் நீதிபதி கூறினார்.


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவியையும் தண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், மனைவியின் தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. இல்லத்தரசி ஊழலில் ஒரு கட்சியாக இருந்தால், அதற்கு முடிவே இருக்காது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மீது 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது மனைவி தெய்வநாயகிக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெய்வநாயகியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சக்திவேல் விசாரணையின் போது இறந்துவிட்டதால், அவரது மனைவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றும் தனது கணவர் லஞ்சம் பெறுவதைத் தடுப்பது ஒரு அரசு ஊழியரின் மனைவியின் கடமை என்றும் நீதிபதி கூறினார்.

"வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் லஞ்சத்தில் இருந்து விலகி இருப்பதுதான். தவறாக சம்பாதித்த பணத்தை குடும்பத்தினர் அனுபவித்திருந்தால், அவர்களும் அதற்குரிய பாதிப்பை அனுபவிக்க வேண்டும்" என்று கூறிய நீதிபதி, "இந்த நாட்டில் கற்பனை செய்யமுடியாத அளவு ஊழல் பரவலாக உள்ளது. ஊழல் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்களே ஊழலுக்கு ஒரு காரணமாக இருந்தால், ஊழலுக்கு முடிவே இருக்காது" என்றும் நீதிபதி அறிவுரை கூறினார்.

தவறாக சம்பாதித்த பணத்தின் பலனாக தேவநாயகியும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள அவர் வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

சக்திவேல் மற்றும் அவரது மனைவி மீது தெய்வநாயகி மீது 6.77 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துகளைக் குவித்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1992ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, 1996ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ​​சக்திவேல் இறந்தார். இதனால், மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனை எடுத்து தெய்வநாயகி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்ற நீதிபதி விதித்த தண்டனையில் தலையீட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

click me!