மீண்டும் மோடி தான் வருவார்னு எனக்கு முன்பே தெரியுமே.!! எனது கட்டுப்பாட்டில் அதிமுகவா.? டிடிவி தினகரன் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jun 2, 2024, 11:13 AM IST

அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு அம்மாவின் தொண்டர்களை  எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  
 


மீண்டும் மோடி ஆட்சி

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து நேற்று மாலை தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும் 300 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என தெரியவந்தது. இந்தநிலையில் திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின்  இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவரிடம் நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  3வது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

டிடிவி கட்டுப்பாட்டில் அதிமுக

தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் 4ஆம் தேதி எல்லாம் தெரிந்து விடும். அதுக்கு பிறகு உண்மை என்ன உங்களுக்கு தெரிந்து விடும் என தெரிவித்தார்.  கருத்துக்கணிப்பின்படி அதிமுக எதிர்பார்த்த தொகுதியில் கிடைக்கவில்லை தலைமையில்  மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம். இந்த நேரத்தில் கருத்துக்களை பேச முடியாது என கூறினார், அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு அம்மாவின் தொண்டர்களை  எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை என தெரிவித்தார். 

தியானத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சுறுசுறுப்பான பிரதமர் மோடி: இன்று மட்டும் 7 கூட்டங்கள்!

click me!